முதல் பாகம்

1. வேதத்தின் உறுப்புக்களை எழுதுக?


சிகிச்சை, வியாக்காரணம், சந்தஸ், நிமித்தம், ஜ்யோதிஷம், கல்பம்.

2. ஜாதக ஸ்கந்தத்தின் பிரிவுகளை தருக.

ஹோரை, தாஜிகம்

3. செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் நிறம் யாது?

சிவப்பு, கருப்பு

4. நால்வகை தோற்றங்களை எழுதுக?

அண்டசம், சுவேதசம், உற்பிசம், சராயுசம்.

5. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது?

சுக்கிரன்

6. ஓரிரு மாதத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றி வரும் கோள் எது?

சந்திரம்

7. யுகங்கள் மொத்தம் எத்தனை? எழுதுக.

 நான்கு.
க்ருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்.

8.அகஸ் என்றால் என்ன?

சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை உள்ள பகல் பொழுதின் அளவே அகஸ் ஆகும்.

9.சூன்ய மாதம் என்றால் என்ன?

ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வந்தால் அது சூன்ய மாதம் என்று அழைக்கப்படும்.

10.தனியநாள் என்றால் என்ன?

திதி மற்றும் நட்சத்திரம் ஆகியவை தங்களுடைய சுப தன்மையில் பாதியை இழந்து நிற்கும் நாள் தனிய நாளாகும்.


11. வார சூலையில் அதிக நாழிகை வரை சூல நேரமிருக்கும் கிழமை எது?

20 நாழிகை கொண்ட வியாழக்கிழமை.

12. ஜோதிடம் என்றால் என்ன?

     ஜோதிடம் என்ற சொல்லுக்கு ஒளியைப் பற்றிய சிறப்பு என்று பொருள்.  சோதித்து அறிந்து சொல்வது ஜோதிடம்.

13. தற்போதைய அயனம், ருதுவை எழுதுக?

தஷிணாயனம், கிரீஷ்ம ருது.

14. மகர சங்கராந்தி எந்த அயன காலத்தில் வரும்?

தஷிணாயனம் முடிந்து உத்தராயணம் ஆரம்பிக்கும் காலம் மகர சங்கராந்தி ஏற்படும்.

 15. தியாஜ்ஜியம் என்றால் என்ன?

     தியாஜ்ஜியம் என்றால் விலக்கப்பட்ட நேரம் என்று பொருள்.

16. கேரளாவில் கடைபிடிக்கும் ஆண்டின் பெயர் என்ன?

     கொல்லமாண்டு

17. யோகினி என்றால் என்ன?

     யோகினி என்றால் காளியிடம் ஏவல் செய்யும் பெண் தேவதை என்று பொருள்.

18. சூரியன் ஆட்சி பெறும் தமிழ் மாதத்தின் பெயர் என்ன?

ஆவணி அல்லது சிம்மம்.

19. முக்குண வேளைகளை எழுது?

சாத்வீகம், ராஜஸம், தாமஸம்

20. எமகண்டம் இரவு நேரத்திலும் வரும். சரியா? தவறா?

      சரி.

21. ராசி அம்சத்தில் சந்திரன் உச்சம் பெற்றால் அவர் நின்ற நட்சத்திர பாதம் என்ன?

      ரோகிணி

22. ஸம்ஹிதா ஸ்கந்தம் பற்றி கூறு?

     இது முகூர்த்தம், வாஸ்து, வருஷப் பணி மற்றும் ஆருடம் என்னும் நான்கு பிரிவுகளை கொண்டது.  நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்க பயன்படுவது முகூர்த்தம், வீடு கட்ட, குளம், கிணறு தோண்ட நல்ல நேரம் காட்டுவது வாஸ்து, இயற்கையின் அம்சங்களை கூறுவது வருஷப் பணி, ஒருவர் மனத்தில் நினைத்ததைப் பற்றி கூறுவது ஆருடம்.

23. ஏழுவகை பிறப்புகளாக ஜீவ ராசிகள் தோன்றுவதின் அவசியம் யாது?

     ஒரு பிறவியின் பயன் மறுபடியும் பிறக்காமல் இருப்பதே.  அதனை அடையும் வரை அவரவர் செய்த கர்ம வினைகளுக்கேற்ப அந்த கர்ம வினைகள் தீரும் வரை ஏழுவகை பிறப்புகளாக ஜீவ ராசிகள் தோன்றி தங்களுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றது.

24. பன்னிரு ராசிகள் மனித உடலில் எந்தெந்த பாகங்களை ஆட்சி செய்கின்றது?

     மேஷம்-தலை, ரிஷபம்-முகம், மிதுனம்-மார்பு, கடகம்-இதயம், சிம்மம்-வயிறு, கன்னி-இடுப்பு, துலாம்-தொப்புள்(அ)அடிவயிறு, விருச்சிகம்-ஆண், பெண், உறுப்புகள், தனுசு-தொடைகள், மகரம்-முழங்கால்கள், கும்பம்-கணுக்கால்கள், மீனம்-பாதங்கள்.

25. இராசிகளின் திசைகளை எழுது?

     மேஷம், சிம்மம், தனுசு-கிழக்கு, ரிஷபம், கன்னி, மகரம்-தெற்கு, மிதுனம், துலாம், கும்பம்-மேற்கு, கடகம், விருச்சிகம், மீனம்-வடக்கு.

 26. கோள்கள் ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களை எழுது?

     சூரியன் 1மாதம், சந்திரன் 2 1/4 நாட்கள், செவ்வாய் 1 1/2 மாதம், புதன் 1 மாதம், குரு 1 வருடம், சுக்கிரன் 1 மாதம், சனி 2 1/2 வருடம், ராகு கேது 1 1/2   வருடம்.  

27. தீதறு நட்சத்திரங்கள் என்றால் என்ன?

     பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய பன்னிரெண்டு நட்சத்திரங்களும் தீதுறு நட்சத்திரங்களாகும்.  இதில் யாருக்காவது பணம் கடனாக கொடுத்தால் திரும்பி வராது.   பிரயாணம் சென்றவர் வீடு திரும்ப மாட்டார்.  வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணமடைய மாட்டார் என்பதால் இந்த நட்சத்திரங்கள் தவிர்க்கப்பட வேண்டிய தீதுறு நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.

28. சௌரமான வருடம் என்றால் என்ன?

     சூரியன் 12 ராசிகள் கொண்ட ராசி மண்டலத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் 365 1/4 நாட்கள் கொண் காலத்தின் அளவை சௌரமான வருடம் என்கிறோம்.

29. சாலிவாகன சகாப்த வருடம் என்றால் என்ன?

     சாலிவாகன சகாப்தம் என்பது சக வருடமாகும்.  அதாவது ஒவ்வொரு வருடமும் மார்ச் 22-ந் தேதியில் (லீப் வருடமானால் மார்ச் 21 ந் தேதி) ஆரம்பமாகும் வருடமே சாலிவாகன சகாப்தமாகும்.

30. நேத்திரம், ஜீவன் பற்றி விளக்கு?

     சூரியன் நிற்கும் நட்சத்திரம் முதல் சந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணி அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் நேத்ரம், ஜீவன் கணக்கிடப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட நாள் பலமாக இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய நேத்திரம், ஜீவன் பயன்படுகிறது.  நேத்திரம்-2 ஜீவன்-1 உத்தமம், நேத்திரம்-1 ஜீவன்-1/2 மத்திமம், நேத்திரம்-0 ஜீவன்-0 அதமம்.

31. தானிஷ்ட பஞ்சமி என்றால் என்ன?

      தோஷ நட்சத்திரங்களில் மரணம் சம்பவித்தால் வீடு மூடப்பட வேண்டிய காலத்தின் விபரமே தானிஷ்ட பஞ்சமி அல்லது அடைப்பு நாள் என்பதாகும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி-6மாதம்
ரோகிணி-4 மாதம்  கார்த்திகை, உத்திரம்-3 மாதம்
மிருகசீரிஸம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம்-2 மாதம்

32. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

     சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பரணி 3ம் பாதத்திலிருந்து
ரிஷப ராசியில் ரோகிணி 1ம் பாதம் வரை சஞ்சாரம் செய்யும் காலமே அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

33. திரிதின ஸ்பிரிக், அவமா என்றால் என்ன?

     ஒரு திதி அல்லது நட்சத்திரம் தொடர்ந்து 3 தினங்கள் வியாபித்து வருமானால் அந்த நாட்கள் திரிதின ஸ்பிரிக் என்று அழைக்கப்படுகிறது.  ஒரே நாளில் 3 திதிகள் அல்லது 3 நட்சத்திரங்கள் வந்தால் அது அவமா எனப்படும்.  இதில் அசுப காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

34. சித்திரை முதல் ஆடி வரையுள்ள தமிழ் மாதங்களில் பௌர்ணமியன்று வரும் நட்சத்திரங்களை கூறுக?

     சித்திரை-சித்ரா, வைகாசி-விசாகம், ஆனி-கேட்டை, ஆடி-பூராடம்.

35. அமிர்தாதி யோகம் பற்றிக் கூறுக?

     நட்சத்திரத்தையும், கிழமையையும் வைத்தே யோகங்கள் கணக்கிடப்படுகிறது.  ஒரு நட்சத்திரம் 60 நாழிகை இருந்தால் அன்று முழுவதும் ஒரே யோகம் இருக்கும்.  அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்பது அமிர்தாதி யோகங்களாகும்.  எந்த காரியமும் செய்யக்கூடாது. 

36. கரணங்களைப் பற்றி நீவிர் அறிந்தவற்றை கூறுக.

கரணம் என்பது திதியின் பாதி கால அளவைக் குறிக்கும்.  6 பாகை கொண்டது ஒரு கரணமாகும்.  இரண்டு கரணங்கள் ஒரு திதியாகும்.  கரணங்கள் மொத்தம் 11 ஆகும்.

37. மூன்று குண வேளைகளை எழுதி அதில் பிறந்தோர்களின் பலன்களை எழுதுக.

முக்குண வேளைகள் என்பது சாத்வீகம், ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகும்.  சாத்வீக வேளையில் பிறந்தவன் மேன்மையான அறிவும், ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் உடையவனாகவும், வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்காதவனாகவும், சந்தோஷகரமான வாழ்க்கை உடையவனாகவும் இருப்பான்.  ராஷஸ வேளையில் பிறந்தவன் புத்திமானாகவும், சுகம், சௌக்கியம் விரும்புவனாகவும், ஆசை அதிகம் உடையவனாகவும், எல்லோருக்கும் உதவி புரிபவனாகவும், அரசாட்சி புரிபவனாகவும் இருப்பான் தாமஸ வேளையில் பிறந்தவன் அதிகமாக தூக்கத்தை உடையவனாகவும், பொய் பேசுபவனாகவும், நோயுள்ள தேகம் உடையவனாகவும், சோம்பல் உடையவனாகவும், படிப்பறிவு இல்லாதவனாகவும், பாபம் செய்பவனாகவும் இருப்பான்.

38. நட்சத்திரங்களுக்கான பஞ்ச பட்சிகளை அட்டவணைப்படுத்துக.

அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் -வல்லூறு
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்     -ஆந்தை
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்      -காகம்
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்    -கோழி
திருவோணம், அவிட்டம், மூலம், பூராடம், உத்திராடம் -மயில்
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி-மயில்

39. கரி நாள் என்றால் என்ன? பன்னிரு மாதங்களில் வரும் கரி நாட்களை எழுதுக.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் சுப வாரம், சுப திதி மற்றும் சுப நட்சத்திரம் வந்தாலும் சூரியனின் தீட்சண்ய சக்தியால் அன்றைய தினம் வருகின்ற வாரம் திதி நட்சத்திரம் தன்னுடைய சுப தன்மையை இழக்கும் நானே கரிநாளாகும்.  சித்திரை 6,15 வைகாசி 7,16,17 ஆனி 1,6 ஆடி 2,10,20 ஆவணி 2,9,28 புரட்டாசி 16,29 ஐப்பசி 6,20 கார்த்திகை 1,10,17 மார்கழி 6,9,11 தை 1,2,3,11,17 மாசி 15,16,17 பங்குனி 6,15,19

40. ருதுக்கள் என்றால் என்ன? விவரி.  ருது என்றால் பருவம் என்று பொருள்.

ஒரு தமிழ் வருடம் இரண்டு மாதங்கள் கொண்ட ஆறு பருவமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை, வைகாசி-வசந்த ருது (இளவேனிற் காலம்) ஆனி, ஆடி-கிரீஷ்ம ருது (முதுவேனில் காலம்) ஆவணி, புரட்டாசி-வருஷ ருது (கார்காலம்) ஐப்பசி, கார்த்திகை-சரத் ருது (கூதிர் காலம்) தை, மாசி-ஹேமந்த ருது (முன்பனி காலம்) மாசி, பங்குனி-சிசர ருது (பின்பனி காலம்)
     அறுபது-விக்ருதி.

41. பஞ்சாங்கம் என்றால் என்ன? திதிகளை வரிசைப்படுத்தி கூறு.

     வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அம்சங்களை கொண்டது பஞ்சாங்கம்.  அமாவாசை (பெணர்ணமி) பிரதமை, துவிதியை, சதுர்த்தி, பஞ்சமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுரத்தசி.

42. கிரகங்களின் ஆட்சி, உச்சம் மற்றும் நீச்ச வீடுகளை ராசிக் கட்டம் வரைந்து நிரப்புக.

ஆட்சி வீடுகள் – மேஷம்-செவ்வாய், ரிஷபம்-சுக்கிரன், மிதுனம்-புதன், கடகம்-சந்திரன், சிம்மம்-குரு.
     உச்ச வீடுகள்-மேஷம்-சூரியன், ரிஷபம்-சந்திரன், கடகம்-குரு, கன்னி-புதன், துலாம்-சனி, விருச்சிகம்-ராகு,கேது, மகரம்-செவ்வாய், மீனம்-சுக்கிரன்.  உச்சத்திற்கு ஏழாவது வீடு நீச்சமாகும்.

43. நட்சத்திரங்களை வரிசைப்படுத்தி எழுது?  சுப, அசுப நட்சத்திரங்களை கூறு?

     உன்னதமான நட்சத்திரங்கள் – அசு ரோகி அஸ் அனு மூல திருவோ உத்திரட்டாதி ரேவதி.
மத்திமமான சுப நட்சத்திரங்கள்- பர மிரு ஆயி மக பூர உத்தி சுவாதி கேட் பூராட உத்திரா அவி சத
     அசுப நட்சத்திரங்கள் – கார் திருவா புன சித் விசா பூரட்டாதி

44. ஹோரை என்றால் என்ன?  அதன் பயன் யாது? ஹோரை கிரகங்களை வரிசைப்படுத்தி எழுதுக?

ஹோரை என்றால் ஆதிக்கம் என்று பொருள்.  சூரிய உதயம் தொடங்கி ஒவ்வொரு குறிப்பிட்ட நேரமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திலேயே இருக்கும்.  அந்த குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட நேரத்தின்   ஹோரை அதிபதியாக இருப்பார்.  ஹோரையானது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு மற்றும் செவ்வாய் என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக வரும்.  சூரியன், செவ்வாய், சனி ஹோரைகள் அசுப ஹோரைகள், அசுப ஹோரைகளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். 

45.கிரகங்களின் நட்சத்திரங்களையும், திசா வருடங்களையும் அட்டவணைப்படுத்துக.

அசுவினி, மகம், மூலம்            கேது         7 வருடம்
பரணி, பூரம், பூராடம்              சுக்கிரன்     20 வருடம்
கார்த்திகை, உத்திரம், உத்திரட்டாதி சூரியன்      6 வருடம்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்   சந்திரன்     10 வருடம்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்  செவ்வாய்   7 வருடம்
திருவாதிரை, சுவாதி, சதயம்       ராகு         18 வருடம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி     குரு         16 வருடம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி      சனி         19 வருடம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி       புதன்        17 வருடம்

ஜோதிட பாடம் பயில புத்தகம் வேண்டும் என விரும்புகிறவர்கள் தொடர்புக்கு

Name

Email *

Message *