பிரசன்ன ஆரூடம்

பிரசன்ன ஆருடம்

       இக்கலை கற்றுக் கொள்வதன் மூலம் ஜோதிடம் தெரியாதவர்கள் கூட ஜோதிடத்திற்கு இணையான பலன்களை கூற முடியும்.

       கேரள நாட்டில் பயன்படுத்தப்படும் மற்றொரு ஜோதிட முறை மலையாள சோழி முறை ஆகும்.  இதற்கு பரல் போட்டுப் பார்ப்பது என்றும் பெயருண்டு.  இந்த மலையாள சோழி முறையின் மூலம் வாழ்க்கையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்க போவது அனைத்தையும் நம்மால் மிக துல்லியமாக கூற முடியும் 

       மேற்கண்ட பிரசன்ன ஆருடம் கணிப்பதில் பலமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  எல்லாவற்றிலும் பிரசன்ன நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  இந்த பிரசன்ன ஆருட முறைகளில் சில முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

       பிரசன்ன ஜோதிடம் என்பது பிரசன்னம் பார்க்க வந்தவர் வந்த நேரத்தைக் கொண்டு பலன் அறியும் முறை ஆகும்.  இது பிரசன்ன ஜோதிடம் அல்லது பிரசன்ன ஆருடம் என்று அழைக்கப்படுகிறது. 

பிரசன்ன ஜோதிடம் அல்லது ஆருடம் என்பது ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் கணித்து பலன் சொல்லவும், ஏதேனும் ஒரு காரியம் செய்வதற்கு அக்காரியம் வெற்றி பெறுமா, தாமதப்படுமா அல்லது தோல்வி அடையுமா என்பதை அறிய பிரசன்ன ஆருடம் சிறந்த வழி ஆகும். 


ஜோதிடக் கலை என்பது ஒரு ஆழம் காண முடியாத கடல் போன்றது.  நவீன உலகில் ஜோதிடம் சம்மந்தமான நூல்கள் பல வெளிவந்துள்ளன ஆனாலும் பண்டைய நூல்களில் உள்ள விஷயங்கள் தற்போது முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.  ஒரு ஜாதகர் தனக்குத் துன்பம் வரும் காலங்களில் மட்டுமே ஜோதிடரை அணுகுவார்.  நவீன கால வாழ்க்கை முறையில் ஒவ்வொரு மனிதனும் பல இன்னல்களை எதிர்கொண்டு அதில் சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேற்படி விஷயங்களை அறிய ஜாதகம் பெரிதும் துணைபுரிகிறது.  ஜாதகம் இல்லாதவர்கள் பிரசன்ன ஆருடம் மூலம் பலன் அறியலாம். 

மேற்கண்ட பிரசன்ன ஆருடம் கணிப்பதில் பலமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  எல்லாவற்றிலும் பிரசன்ன நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  இந்த பிரசன்ன ஆருட முறைகளில் சில முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

பயிற்சியில் இடம் பெறும் அம்சங்கள்

1.     சோழி ஆரூடம்
2.     நட்சத்திர ஆரூடம்
3.     தேங்காய் குறி
4.     சகாதேவர் ஆரூடம்
5.     இராமர் சக்ராரூடம்
6.     சீதா சக்ராரூடம்
7.     எண் பிரசன்னாரூடம்
8.     ஜாமக் கால ஆரூடம்
9.     கடிகாரக ஆரூடம்
10. ஹோரா பிரசன்னாரூடம்
11. தாம்பூலப்பிரசன்னாரூடம்
12. சோழிப் பிரசன்னாரூடம்
13. ஷ்ட மங்களப்பிரசன்னாரூடம்
14. ஜாமக்கோல் ஆரூடம்

ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும்இவையல்லாமல் எண்ணற்ற பிரசன்னாருட முறைகள் இருந்த போதிலும், மேற்குறிப்பிட்ட பிரசன்னாரூட முறைகள்மட்டுமே பெருமளவில் பிரசன்ன ஜோதிடர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  ஆகவே அவற்றை நாமும் அறிந்து கொண்டு பலன் காண முயற்சி மேற்கொள்வோம்.  இறையருள் என்றும் துணை நிற்கட்டும்


 பயிற்சி காலம் : 1 நாள்

பயிற்சி முறை : நேரில் (அ) தபால் மூலம் கற்கலாம்.  ஆண்கள்/பெண்கள் அனைவரும் கற்றுக் கொள்ளலாம்

ஜோதிட பாடம் பயில புத்தகம் வேண்டும் என விரும்புகிறவர்கள் தொடர்புக்கு

Name

Email *

Message *