1. ஒன்பது கிரகங்களின் புத்திகள் ஒரு கிரகத்தின் திசா
காலத்தில் வரும்.சரியா, தவறா?
சரி
2.
சூரியன் நின்ற ராசியிலிருந்து 11 வது ராசியில் சந்திரன் நின்றால் வளர்பிறையா,
தேய்பிறையா?
தேய்பிறை
3.ஒரு நட்சத்திர பாதத்திற்கு ஒரு ராசி என்று அமைக்கும் சக்கரத்தின்
பெயர் என்ன?
நவாம்ச சக்கரம்
4. சூரிய உதயம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட
தேதியில் காலைப் பொழுதில் சூரியன் உதயமாகும் சரியான கடிகார மணியே சூரிய உதயம்
ஆகும்.
5. ஒரு நாளில் எத்தனை லக்கினங்கள் வரும்?
12
6. ஒரு ஜாதகத்தின் உயிர் மற்றும் உடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஜென்ம லக்கினம், ஜென்ம ராசி
7. பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியன் நின்றிருந்தால்
நவாம்சத்தில் சூரியன் எந்த ராசியை அடையும்?
பரணி சுக்கிரனின் நட்சத்திரம். எனவே சிம்ம மண்டலத்தின் மூன்றாவது ராசியான
துலாத்தில் சூரியனின் நவாம்சம் அமையும்.
8.
அட்சம்சம் என்றால் என்ன?
பூமத்திய ரேகைக்கு இணையாக
வடதுருவம் முதல் தென்துருவம் வரை வரையப்பட்டுள்ள கற்பனை கோடுகளே அட்சாம்சம்.
9. சனி திசையில் சூரிய புத்தி எத்தனையாவது புத்தி.
5வது புத்தி
10. திருக்கணிதப்படி ஜாதகம் கணிக்கத் தேவையானவை எவை?
பிறந்த நேரம், பிறந்த தமிழ்
மற்றும் ஆங்கில தேதி, பிறந்த ஊர், பிறந்த வருடத்திற்கான சுத்த திருக்கணித பஞ்சாங்கம்.
11. கார்த்திகை மாதம் 13-ம் நாள் 18 நாழிகை 26 விநாடிக்கு சனி எந்த
நட்சத்திர பாதத்தில் உள்ளார்?
அஸ்தம் 4ல் கன்னி ராசியில் உள்ளார்
12.சூரியன் நீச்சத்தில் இருக்கும்போது பிறந்த குழந்தைக்கு எந்த
ராசியில் லக்கினம் துவங்கும்?
சூரியன் துலாத்தில் நீச்சம்
எனவே லக்கினம் துலா ராசியில் துவங்கும்.
13. ஜென்ம நட்சத்திரம் என்றால் என்ன?
குழந்தை பிறந்த தினத்தில்
பஞ்சாங்கத்தில் எந்த நட்சத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த நட்சத்திரம் தான் ஜென்ம
நட்சத்திரம்.
14. உத்திரம் முதல் பாதம் இடம் பெறும் ராசியின் பெயர் என்ன?
சிம்மம்
15. ஒரு குறிப்பிட்ட தினத்தில் உள்ள கால அளவை விட உதயாதி நாழிகை
அதிகமாக இருந்தால் பஞ்சாங்கத்தில் தரப்பட்டுள்ள அந்த நட்சத்திரமே ஜென்ம
நட்சத்திரம்-சரியா? தவறா?
தவறு.
16. ஒரு மணி நேரத்திற்கு எத்தனை நாழிகை
21/2 நாழிகை
17. ஒன்பது கிரகங்களின் திசா வருடங்களில் மிக அதிக வருடங்களைக்
கொண்ட கிரகங்கள் இரண்டைக் கூறு?
சுக்கிரன் 20 வருடம், சனி 19 வருடம்
18.
கோள்களின் காரகத்துவத்தை சுருக்கமாக கூறுக.
சூரியன்-தந்தை,ஆன்மா சந்திரன்-தாய், சரீரம் செவ்வாய்-சகோதரன், பூமி புதன்-தாய்மாமன், கல்வி குரு-சந்தான விருத்தி சுக்கிரன்-களத்திரம் சனி-ஆயுள்
ராகு-ஞானம், பாட்டனார்
கேது-மோட்சம், பாட்டி.
19. இந்தியாவின் ஆரம்ப முடிவு ரேகாம்சங்களை எழுது?
நமது இந்திய நாடு 69 பாகை 18
கலை கிழக்கிலிருந்த 95 பாகை 42 கலை கிழக்கு வரை வியாபித்துள்ளது.
20.பூரம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்த ஒருவருக்கு 9ம் வயதில்
நடக்கும் திசை என்ன?
பூரம் சுக்கிரனின் நட்சத்திரம் மொத்த திசை
வருடம் 20 அதில் 4ம் பாதத்திற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் எனவே சூரிய தசை நடக்கும்.
21. ராசிப் பரிமாண இருப்பு என்றால் என்ன?
360 பாகைகள் கொண்ட ராசி மண்டலத்திலுள்ள ஒரு
ராசியை சூரிய ஒளி கடப்பதற்கு எழுத்துக் கொள்ளும் கால அளவே ராசி பரிமான்
ஆகும். இது ஒரு மாத கால அளவாகும்.
22. வாக்கிய திருக்கணித பஞ்சாங்கத்திற்கான வேறுபாடுகள் எழுதுக?
வாக்கிய பஞ்சாங்கம் நம் முன்னோர்களால் அஷ்டமா
சித்தி மூலம் வான் மண்டலத்தை ஆய்வு செய்து கிரக நிலைகளை அறிந்து அதன் சஞ்சாரங்களை
அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
திருக்கணிதம் என்பது திருத்தப்பட்ட கணிதமாகும். அதாவது முன்னோர்களால் கண்டறிந்த வான
சாஸ்திரத்தை அறிவியல் வளர்ச்சியின் காரணமாக சில மாறுதல்கள் செய்து திருத்தி
எழுதப்பட்டதாகும்.
23. ஆதியந்த பரம நாழிகை என்றால் என்ன?
ஒரு நட்சத்திரமானது ஆரம்பம்
முதலாக அந்தம் வரை எவ்வளவு நாழிகை விநாடிகள் வியாபித்து இருக்கிறது என்பதை
கண்டறிவதே ஆதியந்த பரம நாழிகையாகும். ஒரு
நட்சத்திரத்தின் மொத்த கால அளவு எதுவோ அதுவே ஆதியந்த பரம நாழிகை ஆகும்.
25. திசா புத்தி காணும் சூத்திரத்தை எழுதுக?
(ஜென்ம நட்சத்திரத்தில்
செல்லானது) x (ஜென்ம நட்சத்திர அதிபதியின் திசா வருடம்) x 360 ஜென்ம நட்சத்திரத்தில் ஆதியந்த பரம நாழிகை
26. ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அனுஷம் எனில் அவருக்கு 3வதாக 5வதாக
நடக்கும் திசையையும் அவரின் ஜென்ம ராசியையும் கூறு?
அனுஷம் என்பதால் ஜென்ம ராசி
விருச்சிகம். அனுஷம் சனியின் நட்சத்திரம்
எனவே மூன்றாவது திசையாக கேது தசையும் ஐந்தாவது தசையாக சூரியன் தசையும் நடக்கும்.
27. லக்கினம், ராசி விளக்கம் தருக?
ஒரு ஜன்மம் நிகழும்போது சூரிய ஒளி எந்த
நட்சத்திர பாதத்தில் விழுகிறதோ அதுவே ஜன்ம லக்கினமாகும். ஒரு குறிப்பிட்ட
தினத்தில் பஞ்சாங்கத்தில் எந்த நட்சத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த
நட்சத்திரத்தின் அந்த பாதம் எந்த ராசியில் அமைகிறதோ அதுவே ஜன்ம ராசியாகும்.
29. சுதேச மணி என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்த குழந்தையின்
இந்திய பொது நேரத்தை (IST) உலக பொது நேரமான கிரீன்விச் நேரத்திற்கு ஏற்றாற் போல்
சரி செய்து கிடைக்கும் நேரமே சுதேச மணி (LMT) ஆகும்.
30. ஒரு குறிப்பிட்ட தேதியில் பஞ்சாங்கத்தில் ஆயில்யம் நட்சத்திரம்
38 நாள் 16 விநாடி எனில் இரவு 9 மணிக்கு பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரம்
மற்றும் ஜனன கால திசையை கூறு?
சூரிய உதயம் 6 மணி என்று எடுத்துக் கொண்டால்
குழந்தை பிறந்த இடைப்பட்ட கடிகாரமணி 15 மணி நேரமாகும். இதனை கொடுக்கப்பட்டிருக்கும் நட்சத்திர
நாழிகைக்குள் உதயாதி நாழிகை வருவதால் இந்த ஆயில்ய நட்சத்திரமே குழந்தையின் ஜென்ம
நட்சத்திரம் ஆயில்யம் புதன் நட்சத்திரமாகையால் ஜெனன திசை புதன் திசையாகும்.
31. ரேகாம்சம் என்றால் என்ன? 0 ரேகாம்சம் எங்கு துவங்குகிறது?
வட துருவத்தையும், தென் துருவத்தையும்
இணைக்கும் நீண்ட கற்பனை கோடுகள் ரேகாம்சம் அல்லத தீர்க்க ரேகை எனப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்து நாட்டின்
லண்டன் நகரின் கிரீன்விச் என்ற இடத்திலிருந்து 0 ரேகாம்சம் துவங்குகிறது.
32. 6 மணி
17 நிமிடத்திற்கு சூரிய உதயமெனில் காலை 11.15 மணிக்கு உதயாதி நாழிகை என்ன
இடைப்பட்ட கடிகார மணி 11.15 மணி கழித்தல் 6.17 மணி. அதாவது 4 மணி 58 நிமிடம். இதை நாழிகையாக்க 2.5 ஆல் பெருக்க கிடைக்கும்
12
நாழிகை 25 விநாடியே உதயாதி நாழிகையாகும்.
33. உத்தராயண காலத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ராசிகளை கூறு?
உத்தராயண காலம் தை மாதம் முதல் ஆனி மாதம்
முடிய ஆகும். எனவே சூரியன் மகர ராசி முதல்
மிதுன ராசி வரை சஞ்சரிப்பார்.
34. 2009 கார்த்திகை மாதம் 20ந் தேதி கோவையில் சூரிய உதயம் என்ன?
6 மணி 28 நிமிடம்
37. சனி திசையில் வரும் 9 புத்திகளின் கால அளவை கணிதம் செய்து
அட்டவணைப்படுத்துக.
சனி
திசை சனி புத்தி 19x19 = 361 36(1x3) 3வ 0மா 3நா
சனி
திசை புதன் புத்தி 19 x17=323 32(3 x1) 2வ 8மா 9நா
சனி
திசை கேது புத்தி 19 x7 =133 13(3 x3) 1வ 1மா 9நா
சனி
திசை சுக்கிர புத்தி 19 x20=380 38(0 x3) 3வ 2மா 0நா
சனி
திசை சூரிய புத்தி 19 x6 =114 11(4 x3) 0வ 11மா 12நா
சனி
திசை சந்திர புத்தி 19 x10 =190 19(0 x3) 1வ 7மா 0நா
சனி
திசை செவ்வாய்புத்தி19 x7 =133 13(3 x3) 1வ 1மா 9நா
சனி
திசை ராகு புத்தி 19 x18 =342 34(2 x3) 2வ 10மா 6நா
சனி
திசை குரு புத்தி 19 x7 =133 13(3 x3) 2வ 6மா 12நா
ஆக
மொத்தம் 19வ 0மா 0நா
39.
திசாபுத்தி இருப்பு என்றால் என்ன? சந்திரன் நின்ற நட்சத்திர பாதத்திற்கு திசா
புத்தி காண்பதற்கான காரணத்தை விவரி?
ஒரு ஜாதகருக்கு ஜென்ம லக்கினம் உயிர். ஜென்ம ராசி உடல். இந்த உலகில் தனக்கு நேரும் சுகம் மற்றும்
துக்கங்களை அனுபவிப்பது உடலே ஆகும். எனவே
உடல் காரனாகிய சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திர
நாதனின் திசையே ஆரம்ப திசையாகும்.ஒரு ஜாதகருக்கு ஜெனன காலத்தில் செல்லான திசையை கணக்கிட நாம்
கீழ்கண்ட சூத்திரத்தை பயன்படுத்துகிறோம்.
ஜென்ம நட்சத்திரத்தில் செல்லான நாழிகை பெருக்கல் ஜென்ம நட்சத்திர
அதிபதியின் திசா வருடம் பெருக்கல் 360 வகுத்தல் ஜென்ம நட்சத்திரத்தின் ஆதியந்த பரம
நாழிகை. இந்த விடையை ஜென்ம நட்சத்திர அதிபதியின் மொத்த நாட்களிலிருந்து
கழிக்க திசா இருப்பு கிடைக்கும்.