மூன்றாம் பாகம்

1. ஜென்மபானு ஜென்ம திரிஜென்ம பாவகங்கள் – எவை?

         1, 5, 9

2. கிரகங்களில் கூடுதலான வலிமை எந்த கிரகத்திற்கு

கேது

3. மந்தன் என்று அழைக்கப்படும் கிரகம் எது?

சனி

4. 8-ம் வகுப்பு தெரிவிப்பது என்ன?

 ஆயுள், வழக்கு

5. ஒருவர் ஜாதகத்தில் இந்த ஸ்தானம் வலுப்பெற்று விட்டால் அவர் எதையுமே அனுபவிக்க முடியாது எது?

12
6. கடக, சிம்ம லக்கின யோகாதிபதிகள் யார்?

சந்திரன், செவ்வாய், குரு    சூரியன், செவ்வாய், குரு

7. வித்தை காரகன் யார்?

புதன்

8. கௌரவம், மதிப்பு தரும் கிரகம் எது?

சூரியன், குரு

9. பணபர ஸ்தானங்கள் எவை?

2, 11 ம் ஸ்தானங்கள்

10. வர்க்கோத்தமம் அடையும் இரண்டு நட்சத்திர பாதங்களை கூறு?

மேஷம்-அஸ்வினி  1.ரிஷபம்-ரோகிணி,  2.மிதுனம்-புனர்பூசம்  3.கடகம்-புனர்பூசம் 4.சிம்ம-பூரம்  1.கன்னி-சித்திரை  2.துலாம்-சித்திரை  3.விருச்சிகம்-அனுஷம்  4.தனுசு-உத்திராடம்  1.மகரம்-உத்திராடம்  2.கும்பம்-சதயம்  3.மீனம்-ரேவதி 4

11. எப்போது வக்கிரம் அடையாத கிரகங்களை கூறு?

சூரியன், சந்திரன், ராகு, கேது

12. ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் 6,8 நிற்கும் நிலைக்கு பெயர் என்ன?

சஷ்டாஷ்டகம்

13. ஷட்பலத்தில் லக்கினத்தில் திக் பலம் பெறும் கிரகங்களில் ஒன்றை கூறுக?
புதன்-குரு

14. கடுமையான மாரக ஸ்தானங்களை கூறு.

2,7ம் பாவாதிபதிகள்

15. உபய லக்கினத்திற்கு பாதகாதிபதி யார்?

7ம் பாவகாதிபதி

16. கும்ப லக்கினத்தின் யோகாதிபதி யார்?

சனி, புதன், சுக்கிரன்

17. சூரியன் பகை பெறும் ராசிகள் இரண்டினை கூறு.

ரிஷபம், மகரம், கும்பம்

18. சுக்கிர திசை சுய புத்தியன் காலம் எவ்வளவு?

20×20=400  40(0×30)

19. ஜாதகருக்கு மாரகம் தரும் ஸ்தானங்கள்எவை?

லக்கினம் துவங்கி வலப்புறமாக எண்ணும்பொழுது வரும் 2, 3, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்கள் மாரக ஸ்தானங்களாகும்.

20. சுக்கிரன் 7ல் நிற்கும்போது ஏற்படும் தோஷம் என்ன?

களத்திர தோஷம்

21. பாவக, கிரக காரகத்துவம் என்றால் என்ன?

பன்னிரு பாவகங்களைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளும் பலன்கள் என்ன என்ன என்பதே பாவக காரகத்துவம்.  ஒன்பது கிரகங்களின் குணங்கள் என்ன என்று எடுத்து  கூறுவது கிரக காரகத்துவம்.

22. தாய், தந்தை பற்றிக்கூறும் பாவகத்தின் மற்ற காரகத்துவத்தையும் சுருக்கமாக கூறு.

தந்தை சூரியன் ஆன்மா,  தாய் சந்திரன் உடல்

23. துலாம் மீன லக்கினங்களின் பாவர்களை கூறுக?

துலாம் – வியாழன், சூரியன்        மீனம்-புதன், சுக்கிரன்

24. ”கேந்திராதிபத்திய தோஷம்” விளக்குக.

ஒரு ஜாதகத்தில்1-4-7-10ம் பாவகாதிபதிகளாகிய கேந்திராதிபதிகள், கேந்திரத்திலேயே இருந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும்.

25. கிரகயுத்தம் என்றால் என்ன?

செவ்வாய், புதன், சனி, குரு, சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் ஏதேனும் ஒரு ராசியில் கூடும் பொழுது கிரஹயுத்தம் ஏற்படுகிறதுமற்ற கிரகங்களைவிட அதிக பாகையில் நிற்கும் கிரகம் வெற்றி பெற்றதாக கருதப்படும்பொதுவாக செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தியே கிரஹயுத்தம் பார்க்கப்படுகிறதுசெவ்வாய்க்குப் பின் உள்ள கிரகங்கள் யுத்தத்தில் தோற்று தன் சுய பலத்தை இழந்து விடுகின்றன.

26. ஆத்மகாரகன் என்பவர் யார்?

ஒருவரது ஜாதகத்தில் ஒவ்வோர் ராசிகளிலும் உள்ள 30 பாகைகளில் அதிக பாகை அல்லது அதிக நட்சத்திர பாதங்களில் எந்த கிரகம் நின்றிருக்கிறதோ அந்த கிரகம் ஆத்மகாரகன் என்று அழைக்கப்படும்அந்த ஜாதகத்தின் பலன்களை தீர்மானிப்பதில் அது வலிமை மிக்க கிரகமாகும்.

23. ஸ்தான பலம் பற்றி விவரி.

ஸ்தானம் என்றால் இருப்பிடம் என்று பொருள்கிரகங்கள் ஆட்சி, உச்ச, நட்பு மற்றும் மூல திரிகோண ராசிகளிலோ, வர்க்கோத்தமம் பெற்றாலோ, நீச்ச வீட்டிலிருந்து உச்ச வீட்டிற்கு செல்லும் வழியிலிருந்தாலோ, கேந்திர, திரிகோணத்தில் இருந்தாலோ அவை ஸ்தான பலமுடையவையாகும்.

28. சர. ஸ்திர, உபய ராசிகள் எவை?

மேஷம், கடகம், துலாம், மகரம் சர ராசிகள், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஸ்திர ராசிகள், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் உபய ராசிகள்.

29. பஞ்சபூத தத்துவப்படி அமையும் ராசிகளைக் கூறு?

நெருப்பு : மேஷம், சிம்மம், தனுசு
   நிலம் : ரிஷபம், கன்னி, மகரம்
  காற்று: மிதுனம், துலாம், கும்பம் 
காற்று : கடகம், விருச்சிகம், மீனம்

30.  லக்கினத்தில் சூரியன் நின்றால் உண்டாகும் பலன்களை கூறு?

லக்கினம் என்ற முதல் பாவகத்தில் சூரியன் நிற்க, ஜாதகர், உஷ்ண தேகம் பெற்றவராக இருப்பார்முன் கோபம் உடையவர்உயரம் உடையவர்போதிய உடல் வலுவும் தசைப் பிடிப்பும் உள்ளவர்நல்ல மனம் உடையவர்எப்பொழுதும் அலைந்து திரிபவர்அரசியல், அரசு பதவி கிடைக்கும்மார்பு நோய், தலைவலி மயக்கம் ஆகியவை ஏற்படும்பிறரை மதிக்கும் தன்மை குறைவானவர்சூடான உணவை விரும்புபவர்பெரிய பதவிகளை வகிப்பவர்.

31. பத்தாம் அதிபதி இரண்டில் அமரும்போது ஜாதகரின் தொழில் எத்தகையதாக இருக்கும்?

திறமையான பேச்சாளராகவும், தன் வாயின் மூலம் ஜீவனம் செய்பவராகவும் இருப்பர்.

32. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஜெனன காலத்தில் ஜென்ம லக்கினம், ராசி மற்றும் சுக்கிரன் நிற்கும் ஸ்தானத்திற்கு 2,4,7,8,12 ஸ்தானங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷமாகக் கருதப்படுகிறது.

33. கால சர்ப்ப தோஷம் விளக்குக.

ஒரு ஜாதகத்தில் ராகு கேதுவிற்குள் லக்கினம் உட்பட அனைத்து கிரகங்களும் அமையப் பெற்றால் அது கால சர்ப்ப தோஷமாகும்.

34. ஜாதகர் பிறந்தது வளர்பிறையா அல்லது தேய்பிறையா என்று எங்ஙனம் அறிவாய்?

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே ராசியில் இருப்பார்கள்பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேர் எதிராக 180 பாகையில் ஏழாவது ராசியில் இருப்பார்கள்.

35. களத்திர தோஷமுள்ள ஜாதகத்தை ராசிக்கட்டம் வரைந்து காட்டு.

ஜெனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவங்களாகிய 1,2,7,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவர்கள் அமர்வது அல்லது 7ம் பாவகாதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைவது போன்றது களத்திர தோஷமாகும்.

36. மேஷ லக்கினத்தின் பொதுப்பலனை எழுதுக.
37. மனிதன் பூவுலகில் சகலவித வசதிகளுடன் வாழ்வதற்கு உதவும் பாவங்கள் எந்த ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறதுஅவற்றின் காரகத்துவத்தை பட்டியலிடுக.

1,5,9ம் பாவகங்கள் ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறதுஅவை லக்கின பாவம். பூர்வ புண்ணிய பாவம் மற்றும் பாக்கிய பாவம் என்று அழைக்கப்படுகின்றன.
லக்கின பாவகம் மூலம் ஜாதகரின் குண நலன்கள், பிறவி இயல்பு, உடலின் அமைப்பு, உடலின் நிறம், செல்வாக்கு நிலை, ஆன்ம பலம், மன இயல்பு, ஆயுள் பலம், ஆடை ஆபரணம், மனக்கவலை, மகிழ்ச்சி, துக்கம், கனவு ஆகியவற்றை அறியலாம்.
ஐந்தாம் பாவகம் மூலமாக பூர்வ புண்ணியம், தந்தையின் தந்தை, வாரிசுகள், மந்திர உபதேசம், வேதங்கள் பற்றிய கல்வி, மனக்கூர்மை, நீதி சாஸ்திரம், பத்திரிக்கை, நல்ல வார்த்தை, அயல் தேசத்தினால் ஏற்படும் கவலை, பொதுக்கூட்ட பேச்சு ஆகியவற்றை அறியலாம்.
ஒன்பதாம் பாவத்தைக் கொண்டு தர்மம், தந்தையின் சொத்துநீர் நிலைகள், ஆலயத்திருப்பணி, குருவின் மூலம் கிடைக்கும் உபதேசம், குருவைச் சார்ந்த சேவைகள், சந்ததி விருத்தி, விசுவாசம், ஆலய தரிசனங்கள், உடன் பிறப்பால் ஏற்படும் துக்கம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை அறியலாம்.

38. நீச்ச பங்கம் என்றால் என்ன? அதன் விதிகளில் ஐந்தைக் கூறு?

நீச்ச வீடுகளில் நிற்கும் கிரகங்கள் ஜனன காலத்தில் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு அமைப்பில் இருந்தால் அது தன் நீச்சத்தை இழந்து வலிமை அடைகிறதுஅதுவே நீச்ச பங்க ராஜ யோகமாகும்.
1. நீச்ச வீட்டின் அதிபதி உச்சம் பெறுதல்.
2. நீச்ச வீட்டின் அதிபதி பரிவர்த்தனை பெறுதல்.
3. நீச்ச கிரகம், நீச்ச வீட்டின் அதிபதியுடன் சேர்க்கை அல்லது அதன் பார்வை பெறுதல்
4. உச்சம் பெற்ற ஒரு கிரகம் நீச்ச வீட்டைப் பார்த்தல்.
5. நீச்ச வீட்டின்அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் இருத்தல்.
6. நீச்சம் பெற்ற கிரகம் வர்க்கோத்தமம் பெறுதல்
7. நீச்சம் பெற்ற கிரகம் நவாம்சத்தில் உச்சம் பெறுதர்
8. நீச்ச கிரகம் வக்கிரமடைதல்

39. பரிவர்த்தனை, அஸ்தமனம் விளக்குக.

பரிவர்த்தனை : ராசிக்கட்டத்தில் ஏதேனும் இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் தம் ஆட்சி வீடுகளை மாற்றிக்கொண்டு நின்றால் அது பரிவர்த்தனை எனப்படும்.  உதாரணமாக கடகத்தில் குருவும், தனுசுவில் சந்திரனும் நிற்பது பரிவர்த்தனை ஆகும்.
அஸ்தமனம் : ராகு கேது நீங்கலாக ஏனைய கிரகங்கள் சூரியனுக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில பாகைகளுக்குள் கூடும்போது அஸ்தமனம் என்ற நிலையை அடைந்து சுய பலனை இழந்துவிடுகின்றன.  கிரகங்கள் அஸ்தமனமாகும் பாகைகள்.  செவ்வாய் 17, குரு 11, புதன் 14, வக்கிர புத்தி 12, சனி 15, சுக்கிரன் 10, வக்கிர சுக்கிரன் 8. விதிவிலக்காக புதன் 4பாகைக்கு மேல் கூடும்பொழுது புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. குருவும்-சுக்கிரனும் இந்த அஸ்தங்கத நிலையை அடையும்போது அதற்கு குரு-சுக்கிர மூடம் என்று பெயர்.

40. ஷட்பல நிர்ணயத்தில் ஏதேனும் மூன்றினை விளக்குக?
41. குருவின் காரகத்துவங்களை கூறுக.

புத்திரன், புத்திரி, அரசர், பிராமணர், சாஸ்திரிகள், மந்திரி, ஆசான், வக்கீல், வேதாநதி, வித்வான், மஞ்சள் வர்ணம், சாரம், குடை, புஷ்பராகக் கற்கள், டிபான் வெள்ளி நகைகள், இனிப்புவியாழக்கிழமை, 3ம் எண், வடக்கு தசை, குருகுலம், பள்ளி, ஆலயங்கள், மந்திரம் ஜெபம், சித்து வேலைகள், மஞ்சள் காமாலை ஆகியவை குருவின் காரகங்களாகும்.

42. பன்னிரு லக்கினங்களுக்கும் சுபர்களை பட்டியலிடுக.
43. லக்கினாதிபதி 12 பாவங்களில் நின்ற பலனை கூறு?
44. ராகு கேதுக்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றைக் கொண்டு சிறு கட்டுரை வரைக.
45. திசா புத்திபலன், கோச்சார பலன்களை நிர்ணயம் செய்யும் விதம் பற்றி கூறு?

ஒரு ஜாதகருக்கு ஜென்ம லக்கினம் உயிர், ஜென்ம ராசி உடல்இந்த உலகில் தனக்கு நேரும் சுகம் மற்றும் தக்கங்களை அனுபவிப்பதே உடலே ஆகும்எனவே உடயல் காரகனாகிய சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திர நாதனின் திசையே ஆரம்ப திசையாக அமையும்.   ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளை தன்னுடைய ஆளுமைக்கு எடுத்துக்கொண்டு தாங்கள் ஜாதகத்தில் நிற்கும் நிலைக்கு ஏற்ப சுக துக்கங்களை நிகழ்துவதே திசா புத்தி ஆகும்

கோள்களின் அன்றைய அசைவே கோச்சாரம் எனப்படும்லக்கினம் என்பது ஆத்மா, உயிர், கந்திரன் என்பது உடல், சரீரம்இவ்வுலகில் ஏற்படும் நன்மை தீமைகளால் பாதிக்கப்படுவது உடல் என்பதால் கோச்சாரம் என்ற ராசி பலன் உடலை வைத்தே பார்க்கப்படுகிறதுதினசரி பத்திரிகைகளில் வெளிவருவது இத்தகைய கோச்சாரமே.

ஜோதிட பாடம் பயில புத்தகம் வேண்டும் என விரும்புகிறவர்கள் தொடர்புக்கு

Name

Email *

Message *