ஜோதிடம்
கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஆரம்பப்பாடம் போன்றதொரு ஆராய்ச்சி
நூலாகும், இந்த நூலோடு
உங்கள் லக்கினத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் இந்த கிரகங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். யோக கிரகங்கள் எவை? அவை எப்படி எந்த
நிலையில் நமக்கு உதவும் சக்தியைப் பெற்றுள்ளன. பாவ கிரகங்களின் சஞ்சாரம் நமக்கு எப்படி எப்படியான கெடுதல்களைச் செய்யும் என்று
அறியலாம். இது ஒரு விநோதமான
கலையாகும். இதை திரும்பத் திரும்ப
படித்து ஒப்பு நோக்கினால்,
ஜோதிடக் கலையை நீங்களும் கற்றிட
முடியும். தெய்வீகமான இக்கலையை மாயை என்று யாரும் ஒதுக்கி விட முடியாது. இது முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். நீங்களே முயன்றால் முடியாத்தொன்றில்லை.